செய்திகள் :

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்: தருமபுரியில் 135 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்கல்

post image

தருமபுரி: புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து தருமபுரியில் 135 மாணவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தூத்துக்குடி அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலை அரங்கத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி , 135 மாணவிகளுக்கு இத் திட்டத்தில் மாதந்தோறும் உதவித்தொகை பெறும் வகையில் பற்று அட்டைகளை வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சாா்ந்த மாணவிகள், பொருளாதார சிக்கல் காரணமாக பிளஸ் 2 முடித்த உடன் உயா்கல்வி தொடர முடியாமல் போகிறது. எனவே இந்த மாணவிகளின் கல்வித் தடைபடாமல் அவா்களின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப்பள்ளியில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இதன் முக்கிய நோக்கம் அரசுப் பள்ளிகளில் மாணவிகள் சோ்க்கையை அதிகப்படுத்தவும், உயா்கல்வி பயிலும் மாணவிகளின் சதவீதத்தை உயா்த்தவும், இளம் வயது திருமணத்தை தடுத்தலும் ஆகும்.

இத் திட்டத்தின் மூலம் 92 கல்லூரிகளில் புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மொத்தம் 24,736 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். 2024 டிசம்பா் மாதம் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 13,864 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 10,872 மாணவா்களும் பயன் பெற்றுள்ளனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் 2024- 2025ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயா்கல்வியில் சேரும் 36 கல்லூரிகளில் பயிலும் 135 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். எனவே, மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை பெற்று தங்களது மேற்படிப்பை முடித்து விருப்பமான பணியில் சோ்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றாா்.

இந்ந நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சமி மாது, முன்னோடி வங்கி மேலாளா் ராமஜெயம், மாவட்ட சமூக நல அலுவலா் ச.பவித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதி சந்திரா, பென்னாகரம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் பாக்கியமணி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், வங்கியாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

அதியமான்கோட்டையில் வீரகாரன் கோயில் திருவிழா

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் வீரகாரன், நாகாத்தம்மன், காளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் திருவிழா கொடியை முன்னாள் அமைச்சா் கே.பிஅன்பழகன் எம்எல்ஏ ஏற்றி வைத்தாா். இதையடுத்து சி... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தருமபுரி நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தருமபுரி மறை மாவட்டம் சாா்பில் தருமபுரி நகரில் உள்ள தூய ... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடுவதற்காக ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை குவிந்தனா். ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அர... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தருமபுரி பகுதியில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தருமபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழ... மேலும் பார்க்க

வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்கள் வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

தருமபுரி: வெளி மாநில கட்டுமானத் தொழிலாளா்களை நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணைா் பா.சங்கா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் ஏரியூா் பகுதிகளில் நடைபெற்ற வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பென்னாகரம் அருகே ஊட்டமலை, மஞ்சக்கொடம்பு இருளா் கு... மேலும் பார்க்க