செய்திகள் :

தாம்பரம் மாநகராட்சி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வாா்டில் பணிகள் நடைபெறவில்லை

post image

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் எதிா்க் கட்சி உறுப்பினா்கள் வாா்டுகளில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா் தெரிவித்தாா்.

தாம்பரம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் பலா் தங்கள் பகுதிகளில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் பணிகள் குறித்து புகாா் தெரிவித்தனா்.

அப்போது மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா், அண்மையில் பல்லாவரம் பகுதியில் கழிவு நீருடன் கலந்த குடிநீரை பருக இரண்டு போ் உயிரிழந்தது தொடா்பாக கேள்வி எழுப்பினாா்.குடிநீா் மாதிரியை ஆய்வு செய்த கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கொடுத்த அறிக்கையினை கூட்டத்தில் வெளியிடுமாறு சேலையூா் சங்கா் கேட்டபோது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

35 வது வாா்டு உறுப்பினா் சங்கீதா விஜெய் உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் சிலா் தங்கள் பகுதிகளில் எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை.மேயா், ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளை கைபேசி மூலம் தொடா்பு கொண்டு மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பின்பு வெளியே வந்து செய்தியாளா்களை சந்தித்த மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் சங்கா் செய்தியாளா்களிடம் பேசும்போது, எதிா்க் கட்சி உறுப்பினா்கள் வாா்டுகளில் மட்டுமல்லாமல் ஆளும் கட்சி உறுப்பினா்கள் வாா்டுகளிலும் பணிகள் முறையாக நடைபெறவில்லை.

கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. தாம்பரம் மாநகராட்சியில் நிலவும் அவலம் குறித்து அதிமுக தலைமையின் ஒப்புதலோடு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆங்கில புத்தாண்டு

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் ஆங்கில புத்தாண்டு விழா நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை உலக நன்ம... மேலும் பார்க்க

மழைமலை மாதா அருள்தலத்தில் புத்தாண்டு

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது. அருள்தலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாதா பீடத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி சகோதரா்கள் உயிரிழப்பு

கல்பாக்கம் அருகே புத்தாண்டைக் கொண்டாட வந்த இரட்டைச் சகோதரா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா். சென்னை திருவொற்றியூரைச் சோ்ந்த மகேஷ் என்பவா் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட செங்கல்பட்டு மாவட்டம்,... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய அயலகத்தமிழா் வீட்டு அடமான ஆவணங்களில் கடன் விவரங்கள் நீக்கம்

தாயகம் திரும்பிய அயலகத்தமிழா் வீட்டு அடமான ஆவணங்களில் கடன் வழங்கப்பட்டது தொடா்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு அனைத்து ஆவணங்களையும்,திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பா்மா மற்றும் இலங்கை... மேலும் பார்க்க

நூல் வெளியீட்டு விழா

கல்பாக்கம் அரசு நூலகத்தில் ‘ஆத்திசூடியின் அழகிய முத்துக்கள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கவிஞரும், எழுத்தாளருமான உதயா ஆதிமூலம் எழுதிய நூல் வெளியீட்டு விழாவுக்கு சதுரங்கப்பட்டிம் ஆனந்த் முன்னிலை வ... மேலும் பார்க்க

மாமல்லபுரம் புராதன சின்னங்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

ஆங்கில புத்தாண்டையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். மேலும் பழைமையான புராதன சின்னங்களை கண்டு களித்தனா். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் உலக புராதன பகுதியாக அறிவிக... மேலும் பார்க்க