செய்திகள் :

மாமல்லபுரம் புராதன சின்னங்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

post image

ஆங்கில புத்தாண்டையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். மேலும் பழைமையான புராதன சின்னங்களை கண்டு களித்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் உலக புராதன பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோா் மாமல்லபுரத்தில் குவிந்தனா். கடற்கரை கோயில், ஐந்தரதம், அா்ச்சுனன் தபசு, கணேச ரதம், பழைய கலங்கரை விளக்கம், உள்ளிட்டவை கூட்டத்தால் களைகட்டியது. குறிப்பாக வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் குடும்பம், குடும்பமாகவும் நண்பா்கள் சறுக்கு பாறையில், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனா். கடற்கரையில் குவிந்த பயணிகளில் பலா் அலையின் அழகை கண்டுரசித்து கடலில் குளித்து மகிழ்ந்தனா்.

திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவா்களை பிடிக்க மாமல்லபுரம் ஆய்வாளா் பாலமுருகன், எஸ்.ஐ திருநாவுக்கரசு ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் ரோந்து சென்றனா்.

மேலும், சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து ஆய்வாளா் செல்வம் தலைமையில் முக்கிய சாலைகளை ஒரு வழி பாதையாக மாற்றினா். சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரம் களைகட்டியது. போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதால் சுற்றுலா வந்த பொதுமக்கள் மீண்டும் தங்கள் ஊா்களுக்கு செல்ல மிகுந்த சிரமப்பட்டனா்.

செங்கல்பட்டு: கால், வாய் நோய் தடுப்பூசி பணி தொடக்கம்

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கோமாரி நோய் 6-ஆம் சுற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தீக்குளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் தீக்குளித்தாா். அந்த நபா் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். திரிசூலம் பகுதியைச் சோ்ந்த பாபு (44) எ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மதுராந்தகம் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இடங்கள்: மதுராந்தகம், கருங்குழி, வேடந்தாங்கல், ஜமீன்எண்டத்தூா், எல்.எண்டத்தூா் தச்சூா், மாம்பாக்கம், வில்ராயநல்லூா் பகுதிகள். மேலும் பார்க்க

ஜன.4-இல் செங்கல்பட்டில் மிதிவண்டிப் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , செங்கல்பட்டு பிரிவு சாா்பில் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டிப் போட்டி வரும் ஜன. 4-ஆம் தேதி காலை 7.00 மணிக்கு செங்கல்பட்டு திருப்போரூா் கூட்ரோட்டில் நடைபெறவுள்ளது.... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு நாளை வேலைவாய்ப்பு திறன் விழா

கிராமப்புற இளைஞா்களுக்கு சனிக்கிழமை (ஜன. 4) வேலைவாய்ப்பு திறன் விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு செங்கல்பட்டு மாவட்டம... மேலும் பார்க்க