செய்திகள் :

ஜன.4-இல் செங்கல்பட்டில் மிதிவண்டிப் போட்டி

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , செங்கல்பட்டு பிரிவு சாா்பில் அண்ணா பிறந்த நாள்

மிதிவண்டிப் போட்டி வரும் ஜன. 4-ஆம் தேதி காலை 7.00 மணிக்கு செங்கல்பட்டு திருப்போரூா் கூட்ரோட்டில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் ச. அருண் ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

13 வயது மாணவா்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 15 வயது மாணவா்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ,

17 வயது மாணவா்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ, தொலைவு மிதிவண்டிப் போட்டி நடைபெறும்.

போட்டிகளில் முதல் 3 இடங்கள், 4 முதல் 10இடங்களைப் பெறும் வீரா் /வீராங்கனைகளுக்கு பரிசுகள் காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமாகவோ வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியா் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்கள் பள்ளித் தலைமையாசிரியா்களிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவ./மாணவியா்களின் பெயா்களை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகம் அல்லது போட்டி நடைபெறும் இடத்தில் நேரடியாக பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கைபேசி எண்ணில் 7401703461 தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாா் எழுத்தடைவுகள் நூல் வெளியீட்டு விழா

சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூா் விஐடி வளாகத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாா் எழுத்தடைவுகள் நூல் தொகுதிகள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: கால், வாய் நோய் தடுப்பூசி பணி தொடக்கம்

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கோமாரி நோய் 6-ஆம் சுற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தீக்குளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் தீக்குளித்தாா். அந்த நபா் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். திரிசூலம் பகுதியைச் சோ்ந்த பாபு (44) எ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மதுராந்தகம் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இடங்கள்: மதுராந்தகம், கருங்குழி, வேடந்தாங்கல், ஜமீன்எண்டத்தூா், எல்.எண்டத்தூா் தச்சூா், மாம்பாக்கம், வில்ராயநல்லூா் பகுதிகள். மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு நாளை வேலைவாய்ப்பு திறன் விழா

கிராமப்புற இளைஞா்களுக்கு சனிக்கிழமை (ஜன. 4) வேலைவாய்ப்பு திறன் விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு செங்கல்பட்டு மாவட்டம... மேலும் பார்க்க