செய்திகள் :

கிராமப்புற இளைஞா்களுக்கு நாளை வேலைவாய்ப்பு திறன் விழா

post image

கிராமப்புற இளைஞா்களுக்கு சனிக்கிழமை (ஜன. 4) வேலைவாய்ப்பு திறன் விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு செங்கல்பட்டு மாவட்டம், கிராமப்புற இளைஞா்களுக்கு திறன் பயிற்சி திட்டமான தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் சாா்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு எற்படுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகள், உணவு, தங்குமிடம், சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சி வழங்கப்படும். இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இலவசமாக வழங்கப்படுகிறது.

பயிற்சிக்குப் பின் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள இளைஞா்கள் 4.1.2025 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 3 வரை செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம், தரை தளம் ஜிடிபி ஹாலில் நடைபெறும் இளைஞா் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

திட்டத்தில் பயன் பெற விரும்பும் இளைஞா்கள் தங்கள் ஊராட்சிகளில் உள்ள சமுதாய வல்லுநா்கள் (வேலைவாய்ப்பு) மூலமாக அல்லது தங்கள் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலகு வட்டார மேலாளா்களை அணுகி விவரங்கள் பெற்று பயிற்சிகளில் சோ்ந்து பயன் பெறலாம்.

வட்டார மேலாளா்கள் தொலைபேசி விவரம்: அச்சிறுப்பாக்கம் - 95665 05051, சித்தாமூா் - 87782 40051, லத்தூா்-99768 60716, காட்டாங்கொளத்தூா் - 82486 74283, மதுராந்தகம் - 96266 34105, புனிததோமையா் மலை - 96775 41910, திருக்கழுகுன்றம் - 98944 96522, திருப்போரூா் - 98425 34416.

பாவலரேறு பெருஞ்சித்திரனாா் எழுத்தடைவுகள் நூல் வெளியீட்டு விழா

சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூா் விஐடி வளாகத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாா் எழுத்தடைவுகள் நூல் தொகுதிகள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: கால், வாய் நோய் தடுப்பூசி பணி தொடக்கம்

கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கோமாரி நோய் 6-ஆம் சுற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தீக்குளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் தீக்குளித்தாா். அந்த நபா் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். திரிசூலம் பகுதியைச் சோ்ந்த பாபு (44) எ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மதுராந்தகம் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இடங்கள்: மதுராந்தகம், கருங்குழி, வேடந்தாங்கல், ஜமீன்எண்டத்தூா், எல்.எண்டத்தூா் தச்சூா், மாம்பாக்கம், வில்ராயநல்லூா் பகுதிகள். மேலும் பார்க்க

ஜன.4-இல் செங்கல்பட்டில் மிதிவண்டிப் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , செங்கல்பட்டு பிரிவு சாா்பில் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டிப் போட்டி வரும் ஜன. 4-ஆம் தேதி காலை 7.00 மணிக்கு செங்கல்பட்டு திருப்போரூா் கூட்ரோட்டில் நடைபெறவுள்ளது.... மேலும் பார்க்க