செய்திகள் :

Doctor Vikatan: கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன... எப்படி சரிசெய்யலாம்?

post image

Doctor Vikatan: என் 70 வயது பாட்டிக்கு அடிக்கடி கால் நரம்பு (கெண்டை) பிடித்துக்கொள்வதாகச் சொல்கிறார். அவர் இப்போதும் நன்றாக  விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நன்றாக நடக்கக் கூடியவர். கெண்டை பிடித்துக்கொள்ளும்போது நன்றாக எண்ணெய் தேய்த்து நீவிக் கொண்டே இருந்தால் 20 நிமிடங்களில் சரியாகிறது. கெண்டை பிடித்தல் என்றால் என்ன... இது எதனால் ஏற்படுகிறது... இதனை எப்படி சரிசெய்யலாம்...வராமல் தவிர்க்க முடியுமா?
-Agomathi, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

கெண்டை பிடிப்பது என்பதை மருத்துவ மொழியில் 'மஸுல் கிராம்ப்' (muscle cramp) என்று சொல்வோம். ஒரு தசையின் இயல்பே விரிந்து, சுருங்குதல்தான்.  இதில் சுருங்குதல் என்பதுதான் இயக்கங்களைக் கொண்டு வரும் என்றாலும், சுருங்குதலைப் போலவே விரிதலும் மிகவும் முக்கியம்.

சில சமயங்களில் சுருங்கிய தசைகள், மீண்டும் விரிவடைய முடியாமல், ரிலாக்ஸ் ஆக முடியாமல்  சுருங்கிய நிலையிலேயே இருக்கும். அதைத்தான் நாம் கெண்டை பிடிப்பது (sustained muscle contraction) என்று சொல்கிறோம். நம் உடலில் ரிலாக்சேஷனுக்கு தேவையான சில தனிமங்களும், சத்துகளும் குறையும்போது இப்படி ஏற்படலாம். இவற்றில் பிரதானமானதும் பொதுவானதும் என்றால் நீர்ச்சத்துக் குறைபாடு. குளிர்காலங்களில் கெண்டை பிடிப்பது சற்றே அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குளிர்காலங்களில் தாக உணர்வு சற்று குறைவாகவே இருக்கும்.  அடிக்கடி தண்ணீர் குடிக்காததால், அவர்களது உடலில் எளிதாக நீர்வறட்சி ஏற்படும்.

pain

வெயில் காலத்தில் நம்மை அறியாமல் நிறைய தண்ணீர் குடிப்போம். அதனால்  கோடையில் இந்தப் பிரச்னையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். சிறு வயதினருக்கும் கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வருகிறது. காரணம், இன்று பெரும்பாலும் பலரும் ஏசி செய்யப்பட்ட சூழலில் இருக்கிறோம். அதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ளாமல் தூங்குவதால், இது இன்னும் தீவிரமாகும்.  அடுத்து நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் என உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவதும் கெண்டை பிடிப்பதற்கான காரணமாக இருக்கலாம்.  சுருக்கமாக, எலக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் என்று இதைப் புரிந்துகொள்ளலாம். 

மூன்றாவது முக்கிய காரணம், கால்சியம் சத்துக் குறைபாடு. அடிக்கடி கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வந்தால், உடலில் கால்சியம், மக்னீசியம் மற்றும் எலக்ரோலைட் அளவுகளை செக் செய்துபார்க்க வேண்டியது அவசியம். அப்படிக் குறைபாடு இருந்தால் அதற்கான காரணம் அறிந்து சரி செய்ய வேண்டும்.  தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும்.  தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கெண்டைக்கால் பகுதியில் மட்டுமன்றி, பாதங்கள், பாத விரல்கள், தொடைகள், கைகள் போன்ற பகுதிகளில்கூட தசைப்பிடிப்பு வரலாம். எனவே அந்தப் பகுதிக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 

தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

சத்துக் குறைபாடுகளுக்கான மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள், தினமும் இளநீர் குடிப்பது, மோரில் உப்பு சேர்த்துக் குடிப்பது, பொட்டாசியம் சத்துக்காக வாழைப்பழம் சாப்பிடுவது போன்றவற்றைப் பின்பற்றலாம். இவற்றை எல்லாம் பின்பற்றிய பிறகும் பிரச்னை சரியாகவில்லை என்றால், 'நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி' என்ற டெஸ்ட் செய்து பார்த்து, நரம்புகளும் தசைகளும் நன்றாக உள்ளனா என்று பார்க்க வேண்டும்.  நரம்பியல் கோளாறு ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

`யாருக்கு அதிகாரம்?' பதிவாளர் - துணைவேந்தர் போட்டி போட்டு பேட்டி; தமிழ்ப் பல்கலையில் வெடித்த சர்ச்சை

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் சங்கர். பதிவாளர் தியாகராஜன் இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 27ம் தேதி துணை வேந்தர் சங்கரை பொறுப்பிலிருந்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் அறையின் பூட்டு உடைப்பு... துணை வேந்தர்- பதிவாளர் மோதல்!

40 பேர் நியமனம்..தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்தவர் திருவள்ளுவன். இவர் ஓய்வு பெற இருந்த சூழலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாஸ்கரன் என்பவர் துணை வேந்தராக இருந்த போது 2017-2018ம் ஆண்டு​களில் துணை... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்தால் உடலுக்கு நல்லதா... சளி பிடிக்குமா?

Doctor Vikatan:வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? வெந்தயம் ஊறவைத்த நீர் குளிர்ச்சியானது, அது சளி பிடிக்க காரணமாகும், தவிர, மலச்சிக்கலையும் ஏற்... மேலும் பார்க்க

Registration: ``ஆவண எழுத்தர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்...'' - அமைச்சர் மூர்த்தி

"வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் எனக்கு இரண்டு கண்கள்..." என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியுள்ளார்.பதிவுத்துறை அலுவலகம்மதுரையில் நடந்த பதிவுத்துறை மாநிலப் பணியாளர் மற்று... மேலும் பார்க்க

`பாராட்டுக்கள்' அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை! - காரணம் என்ன?!

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ச... மேலும் பார்க்க

Diabetes Meal Planning: நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கான சிம்பிள் ஃபுட் கைட்!

வீடே மணக்கும் அளவுக்கு குடும்பத்தினர் அனைவரும் தோசை சுட்டு சாப்பிடும்போது, உங்களுக்கு மட்டும் கோதுமை உப்புமான்னா கொஞ்சம் சலிப்பாதான் இருக்கும். ஆனால் என்ன செய்வது சர்க்கரைநோய் வந்துவிட்டால் வாயைக்கட்ட... மேலும் பார்க்க