செய்திகள் :

Registration: ``ஆவண எழுத்தர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்...'' - அமைச்சர் மூர்த்தி

post image

"வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் எனக்கு இரண்டு கண்கள்..." என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியுள்ளார்.

பதிவுத்துறை அலுவலகம்

மதுரையில் நடந்த பதிவுத்துறை மாநிலப் பணியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, "தமிழக அரசுக்கு பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை மூலம் 87 சதவிகிதம் வருவாய் கிடைத்துள்ளது. மற்ற துறைகளை விட நம் துறைதான் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. நடப்பாண்டில் பதிவுத்துறையில் ரூ. 2 ஆயிரத்து 200 கோடி, வணிக வரித்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. நடப்பாண்ட்டில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வணிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வணிகவரித்துறையில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பதிவுத்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வில் உள்ள பிரச்னைகள் களையப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்படும். பதிவுத்துறையில் சார்ஜ் மெமோ பெறப்பட்ட காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 150 பணியாளர்களுக்கு பதிவுத்துறை செயலாளர் தலைமையிலான குழு விசாரித்து தவறு செய்யாத பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். ஜனவரி மாதத்துக்குள் 38 உதவி பதிவுத்துறை தலைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

அமைச்சர் பி.மூர்த்தி

வணிகவரித்துறையில் 20 நாள்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதிவுத்துறையில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பதவி உயர்வு வழங்க இயலவில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பதவி உயர்வு வழங்கப்படும். வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் எனக்கு இரண்டு கண்கள். பதிவுத்துறை அலுவலர்கள் ஆவண எழுத்தர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். பதிவுத்துறை அலுவலர்கள் தாங்களாகவே பிரச்னைகளில் மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல. அதே நேரம் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பணியில் பிரச்சனை என்றால் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்று பேசினார்.

Moorthy-யால், Stalin-க்கு புது தலைவலி...தூங்கவிடாத அமைச்சர்கள்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது. 500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தத்து கொடுக்கப்படுவதாக வரும் செய்தி. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என இந்த மூன்... மேலும் பார்க்க

``சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் வாக்குறுதி என்ன ஆனது?'' - அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொ... மேலும் பார்க்க

``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்

'நாம் ஆண்ட பரம்பரை' என பேசியது சர்ச்சையான நிலையில், 'நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை' என அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் மூர்த்திஅ... மேலும் பார்க்க

ஆண்ட பரம்பரை சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்? | அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படுகிறதா?| Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * எங்கள் பரம்பரை பரம்பரை..." - அமைச்சர் மூர்த்தி பேச்சு சர்ச்சை! * மூதாதையர் மரபு - தவறான திருத்தப்பட்ட தகவல்கள் பரவுவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் விளக்கம். * திருந... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? - Fact Check

'என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?' என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, 'கொள்முதல் விலை அதிகமாக உள்ளது' என்று பொங்கல் தொகுப்ப... மேலும் பார்க்க

Khushbu: ``பாலியல் குற்ற விவகாரத்தில் கட்சிப் பாகுபாடெல்லாம் பார்க்காதீங்க.." -நடிகை குஷ்பு ஆவேசம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மதுரையில் தமிழக பா.ஜ.க மகளிர் அணி சார்பாக நீதி கேட்கும் பேரணி நடத்தவிருப்பதாக பா.ஜ.க மகளிர் அணி அறிவித்திருக்கிறது. இது தொடர்ப... மேலும் பார்க்க