வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
Khushbu: ``பாலியல் குற்ற விவகாரத்தில் கட்சிப் பாகுபாடெல்லாம் பார்க்காதீங்க.." -நடிகை குஷ்பு ஆவேசம்
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மதுரையில் தமிழக பா.ஜ.க மகளிர் அணி சார்பாக நீதி கேட்கும் பேரணி நடத்தவிருப்பதாக பா.ஜ.க மகளிர் அணி அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சென்னையில் பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் பேசிய நடிகை குஷ்பு, ``25 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுத்தாகிவிட்டது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பின் தாக்கத்தை இறக்கும் வரை அந்தப் பெண்ணால் மறக்க முடியுமா? அந்தக் குழந்தை இருக்கும் வரை அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் வருத்தம் இருக்கும்தானே.
ஏற்கெனவே, குற்றப்பின்னணி இருந்த ஒருவரை கைது செய்தப் பிறகும் எப்படி வெளியே விட்டீர்கள்? இப்போது இப்படி நடந்து விட்டது. இனி இதுபோல நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதுபோன்ற பிரச்னை வரும்போதெல்லாம் பணம் மட்டும்தான் கொடுக்கிறீர்கள். ஒருபெண் பாலியல் ரீதியில் பாதிக்கப்படும்போது, கட்சிப்பாகுபாடெல்லாம் பார்க்கக் கூடாது. அவர் எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், எந்த மாநிலத்தவராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் பா.ஜ.க சார்பாக பேசவில்லை. பெண் என்பதால்தான் பேச வந்திருக்கிறோம். இதை அரசியலாக்காதீர்கள். பெண்கள் ஃபுட்பால் கிடையாது. இங்கேயும் அங்கேயும் அரசியலாக்கிப் பேசுவதற்கு.
பாதிக்கப்பட்ட அந்த மாணவியைப் பாராட்டுகிறேன். தைரியமாக வெளியே வந்து பேசியிருக்கிறார். அந்தப் மாணவியின் தகவலை வெளியே கசியவிட்டவர்களை முதலில் தண்டிக்க வேண்டும். நான் தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்தபோது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டிலிருந்துதான் பாலியல் தொடர்பான புகார்கள் அதிகமாக இருக்கும். பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. நமது மாநிலத்தில் குறைவாக இருக்கிறது என ஒப்பிடுவதே தவறு. அப்படி செய்யக்கூடாது. அதனால்தான் கட்சி ரீதியாக சாணிப் பூசுகிறீர்கள்.
ஒட்டுமொத்தமாக நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா... இல்லையா... என்பதைத்தான் பார்க்க வேண்டும். கண்ணகிக்கு உதாரணம் சொல்லும் நமது மாநிலத்தில் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. என் வீட்டில் ஒரு பிரச்னை நடக்கிறது, அதற்காக நான் பேசுகிறேன். இந்த விவகாரத்தை எதிர்த்து பேரணி நடத்தவிருந்த பா.ம.க தலைவர் சௌமியாவை ஏன் கைது செய்திருக்கிறீர்கள். இந்த விவகாரத்தில் கனிமொழி எங்கே சென்றார்? தி.மு.க-வின் மகளிர் அணி எங்கே? ஏன் இந்த மௌனம்? 'மத்திய அரசுதான் எஃப்.ஐ.ஆர் கசியவிட்டது. கேட்டால் டெக்னிக்கல் பிரச்னை என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் நடக்காத டெக்னிக்கல் எர்ரர் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி நடக்கிறது' என சீமான் விமர்சனம் வைத்திருக்கிறார்.
அவரைப் பற்றிப் பேசவே விரும்பவில்லை. அவர் இந்தக் கேள்விகளை மாநில முதல்வரைப் பார்த்துக் கேள்வி கேட்டால்தான் சரியாக இருக்கும். மாநில மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் அமைதியாகதான் இருக்கிறது. யார் அந்த சார்... இப்போதுவரை அது தெரியவில்லை. இந்த நாட்டைத் தாண்டினால் எச்சில் துப்பக்கூட பயப்படுபவர்கள், நாம் நாட்டில் மட்டும்தான் குற்றங்களையெல்லாம் சாதாரணமாக செய்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். சென்னைக்கு வந்து 38 வருடங்களாகிறது. அப்போதுமுதல் இப்போதுவரை கண்ணகியாகதான் வாழ்ந்துவருகிறேன். மனதில் பட்டதைப் பேசுவேன், செய்வேன். குஷ்பு எப்படி இருப்பாரோ எப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்." என்றார்.