செய்திகள் :

`யாருக்கு அதிகாரம்?' பதிவாளர் - துணைவேந்தர் போட்டி போட்டு பேட்டி; தமிழ்ப் பல்கலையில் வெடித்த சர்ச்சை

post image

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் சங்கர். பதிவாளர் தியாகராஜன் இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 27ம் தேதி துணை வேந்தர் சங்கரை பொறுப்பிலிருந்து தியாகராஜன் நீக்கம் செய்வதுடன், பல்கலைகழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை துணை வேந்தராக (பொ) நியமிப்பதாக தியாகராஜன் ஆணை பிறபித்தார். இதற்கிடையே பொறுப்பு பதிவாளரான தியாகராஜனை அந்த பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதுடன் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் வெற்றிச்செல்வனை பதிவாளராக நியமனம் செய்வதாக சங்கர் ஆணை பிறப்பித்தார்.

துணை வேந்தர் சங்கர்

பூட்டை உடைத்து பதவியேற்பு

இந்த சம்பவம் தமிழ்ப் பல்கலைகழக வட்டாரத்தில் கடும் சல சலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல் அனைவரும் பணிக்கு வந்தனர். தியாகராஜன் தன் அறைக்கு செல்லாமல் அருகில் இருந்த அறையில் பணியை மேற்கொண்டார். இதையடுத்து சங்கரால் பதிவாளராக நியமனம் செய்யப்பட்ட வெற்றிச்செல்வன் பதிவாளராக பொறுப்பேற்றுக்கொள்ள வந்தார். பதிவாளர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதற்கான சாவி தியாகராஜனிடம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையின் பூட்டை உடைத்து வெற்றிச்செல்வன் அறைக்குள் சென்று பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது பணியைத் தொடங்கினார். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தியாகராஜன் பேட்டி

இதற்கிடையே சங்கரும், தியாகராஜனும் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். தியாகராஜன் கூறியதாவது, துணைவேந்தரை பதவி நீக்கும் அதிகாரம் எனக்கில்லை. ஆனால், துணைவேந்தர் பணிகளை கவனிக்கக்கூடிய உத்தரவை பிறப்பிக்கக்கூடிய அதிகாரத்தை ஆளுநர் எனக்கு தந்திருக்கிறார்.

பதிவாளர் தியாகராஜன்

துணைவேந்தர் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பணிகளை செய்யவில்லை. பணி துஷ்பிரயோகம் செய்து அதிகாரம் செலுத்தும் போக்கில் செயல்படுகிறார். பணி ஆணை வழங்கக்கூடிய அதிகாரத்தை ஆளுநர் வழங்கிய அடிப்படையில் தான் இவருக்கு அதிகாரம் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் இருவரும் தொடர்ந்து நீடியுங்கள், தற்போது அமைதி நிலவட்டும் இருவரும் அவரவர் பணியை பாருங்கள். திருவள்ளுவர் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடப்பதால் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆட்சி குழுவைக் கூட்டி உரிய முடிவை எடுக்கலாம் என அரசு செயலாளர் உள்ளிட்டோர் தரப்பில் வாய்மொழி உத்தரவாக தெரிவித்துள்ளார்கள்.

இன்று பணி செய்ய தமிழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளேன். அரசு என்ன வழிகாட்டுதல் செய்கின்றதோ அதை பின்பற்றுவேன். தமிழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்னைகள், ஊழல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இவற்றை விசாரிக்க, ஆளுநர், நீதிஅரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் ஒரு குழுவினை நியமித்திருக்கிறார். அந்த குழு கண்டிப்பாக உரிய நியாயமான அறிவிப்பினை நல்கும், அது வந்தால் தான் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைதியான சூழலுக்கு திரும்பும். தற்போது, தலைமை செயலர் தொலைபேசியில் என்னிடம், பதிவாளராக நீங்கள் தொடர்ந்து செயல்படுங்கள், மாதம் இறுதி என்பதால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய பணிகளை தொடருங்கள் என்றார், அதை செய்கிறேன்." என்று தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு

சங்கர் பேட்டி

சங்கர் கூறியதாவது, "தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் வரும் 8-ம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக்கு வருகிறது 40 பேரில் பொறுப்பு பதிவாளர் தியாகராஜனும் உள்ளதால் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவரை நீக்கி புதிய பதிவாளராக வெற்றிச்செல்வனை பொறுப்பு பதிவாளராக நியமனம் செய்துள்ளோம். துணைவேந்தருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சட்டப்படி பொறுப்புத் துணைவேந்தருக்கும் உள்ளது. 10 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை செய்த பிறகே பதிவாளரின் அறை உடைக்கப்பட்டது. அதில் எந்த விதி மீறல்களும் இல்லை. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் எந்த சிக்கலும் ஏற்படாது அதற்கு புதிய பதிவாளருக்கு அதிகாரம் உண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

Moorthy-யால், Stalin-க்கு புது தலைவலி...தூங்கவிடாத அமைச்சர்கள்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது. 500 அரசு பள்ளிகள் தனியாருக்கு தத்து கொடுக்கப்படுவதாக வரும் செய்தி. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை என இந்த மூன்... மேலும் பார்க்க

``சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் வாக்குறுதி என்ன ஆனது?'' - அண்ணாமலை கேள்வி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொ... மேலும் பார்க்க

``நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை'' - சர்ச்சை குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்

'நாம் ஆண்ட பரம்பரை' என பேசியது சர்ச்சையான நிலையில், 'நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை' என அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் மூர்த்திஅ... மேலும் பார்க்க

ஆண்ட பரம்பரை சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்? | அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படுகிறதா?| Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * எங்கள் பரம்பரை பரம்பரை..." - அமைச்சர் மூர்த்தி பேச்சு சர்ச்சை! * மூதாதையர் மரபு - தவறான திருத்தப்பட்ட தகவல்கள் பரவுவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் விளக்கம். * திருந... மேலும் பார்க்க

பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? - Fact Check

'என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?' என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, 'கொள்முதல் விலை அதிகமாக உள்ளது' என்று பொங்கல் தொகுப்ப... மேலும் பார்க்க

Khushbu: ``பாலியல் குற்ற விவகாரத்தில் கட்சிப் பாகுபாடெல்லாம் பார்க்காதீங்க.." -நடிகை குஷ்பு ஆவேசம்

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக மதுரையில் தமிழக பா.ஜ.க மகளிர் அணி சார்பாக நீதி கேட்கும் பேரணி நடத்தவிருப்பதாக பா.ஜ.க மகளிர் அணி அறிவித்திருக்கிறது. இது தொடர்ப... மேலும் பார்க்க