புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 4,411 மாணவிகளுக்கு வங்...
பிக் பாஸ் 8: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தன்ர்
குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தைச் நேர்ந்த போட்டியாளருக்கு அறிவுரைகளையும், மற்ற போட்டியாளருக்கு தங்களுக்கு ஏற்பட்ட முரண்பாட்டினை தெரிவித்தனர்.
எப்போதும் சண்டையும் சச்சரவுமாக காணப்படும் பிக் பாஸ் வீடு குடும்பத்தினர் வருகையால் இந்த வாரம் மகிழ்ச்சியாக காணப்பட்டது
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!
பிக் வீட்டில் இருந்து கடந்த வாரம் நடிகர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறியுள்ளனர்.
நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியை யார் வென்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.