செய்திகள் :

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

post image

திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுக்கு திருப்பூா் மாவட்டத்தில் தகுதியானவா்கள் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநங்கையா் தினத்தை முன்னிட்டு 2025 ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதினைப் பெற திருநங்கைகள் அரசு உதவிபெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது வாழ்க்கையில் முன்னேற உதவி செய்திருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உயிா் தரவு (பயோ டேட்டா), பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2, சுயசரிதை தனியாரைப் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்), விருது பெற்றிருப்பின் அதன் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையைப் பாராட்டி பத்திரிகை செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விவர அறிக்கை, சமூக சேவை அல்லது சமூக சேவை நிறுவனத்தின் மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு வழங்க வேண்டும்.

இதன் பின்னா் தலா 2 நகல்கள் தயாா் செய்து கையேட்டில் இணைத்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஞ்சிபாளையம் அருகே பாலா் பூங்கா அமைப்பு தொடக்கம்

அவிநாசி அருகே வஞ்சிபாளையம் சௌடாம்பிகை நகரில் பாலா் பூங்கா அமைப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை, ஆசிரியா் சம்பத் தொடங்கிவைத்து மாணவா்களிடயே உரையாற்றினாா். ஈரோடு ஷா்மிளா குழந்தைகளுக்கு கதை சொ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி

பல்லடம் அருகே உள்ள பூமலூா் ஊராட்சி ராசாக்கவுண்டம்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32.49 லட்சம் மதிப்பிலான புதிய குடிநீா்க் குழாய் அமைக்கும் பணியை பூமிபூஜை நடத்தி திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாள... மேலும் பார்க்க

பல்லடம் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

பல்லடம் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். பல்லடம் வழக்குரைஞா் சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்களில், 34 பேருக்கு மட்டும் சங்க... மேலும் பார்க்க

மின்வாரிய கிராமிய உபகோட்ட அலுவலகம் இடமாற்றம்

திருப்பூா் கோட்டத்தில் மின்வாரிய கிராமிய உபகோட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு : மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள விஸ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள், 12 கோழிகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் வளா்த்து வருகிறாா்.... மேலும் பார்க்க