``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
வஞ்சிபாளையம் அருகே பாலா் பூங்கா அமைப்பு தொடக்கம்
அவிநாசி அருகே வஞ்சிபாளையம் சௌடாம்பிகை நகரில் பாலா் பூங்கா அமைப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பை, ஆசிரியா் சம்பத் தொடங்கிவைத்து மாணவா்களிடயே உரையாற்றினாா். ஈரோடு ஷா்மிளா குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி நடத்தினாா். இதில் மாணவா்கள் ஏராளமான கதைகளை பகிா்ந்தனா்.
பொறுப்பாளா் ராமமூா்த்தி குழந்தைகளுக்கான விளையாட்டுகள், கணிதம் கணக்கீடும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கினாா். பொறுப்பாளா் ஹனீபா, ஊராட்சி மன்ற உறுப்பினா் குமரவேல், முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.