செய்திகள் :

ஒருவர் இரட்டை சதம், இருவர் சதம் விளாசல்; தென்னாப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இரட்டை சதம் விளாசிய ரியான் ரிக்கல்டான்

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் களமிறங்கினர். மார்க்ரம் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, வியான் முல்டர் 5 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ரியான் ரிக்கல்டான் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.

இதையும் படிக்க: முதல் பந்திலிருந்து ஆஸி.யை திணறடித்த ரிஷப் பந்த்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர். கேப்டன் டெம்பா பவுமா 179 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் 232 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவருடன் டேவிட் பெடிங்ஹம் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முதல் நாளில் 316 ரன்கள் குவித்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டேவிட் பெடிங்ஹம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரியான் ரிக்கல்டானுடன் கைல் வெரைன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் இரட்டை சதம் விளாசியும், கைல் வெரைன் சதம் விளாசியும் அசத்தினர். கைல் வெரைன் 147 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரியான் ரிக்கல்டான் 343 பந்துகளில் 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 29 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!

பின் வரிசை ஆட்டக்காரர்களான மார்கோ யான்சென் மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தங்களது பங்குக்கு அதிரடியாக விளையாடி தென்னாப்பிரிக்க அணி 600 ரன்களைக் கடக்க உதவினர். மார்கோ யான்சென் 54 பந்துகளில் 62 ரன்கள் (8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தும், கேசவ் மகாராஜ் 35 பந்துகளில் 40 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் சல்மான் அகா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷாஷத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

10 ஆயிரம் ரன்கள் சாதனையை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித் கூறியதென்ன?

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் அடிக்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் தவறவிட்டார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளு... மேலும் பார்க்க

பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி: உஸ்மான் கவாஜா

சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ... மேலும் பார்க்க

இந்தியர்களின் உளவியல் யுக்தி (2 vs 11) பலனளிக்கவில்லை: மிட்செல் ஜான்சன்

புதிதாக அணியில் இணைந்த சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டரை அச்சுறுத்தி வெற்றிபெறலாம் என நினைத்த இந்தியர்களின் உளவியல் யுக்தி பலனளிக்கவில்லை என முன்னாள் ஆஸி. வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். பார்டர் - ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன... மேலும் பார்க்க

ரஷித் கான் அபார பந்துவீச்சு; டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!

ரஷித் கானின் அபார பந்துவீச்சால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் அணி வென்று அசத்தியுள்ளது.ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்... மேலும் பார்க்க

விராட் கோலி சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்: ஏபிடி வில்லியர்ஸ் அறிவுரை!

விராட் கோலியின் நண்பரும் முன்னாள் ஆர்சிபி வீரருமான ஏபிடி வில்லியஸ் சண்டையில் ஈடுபடுவதை குறைக்குமாறு கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்தியா தோல்வியடைந்தது. இதில் 9 இன்... மேலும் பார்க்க