சோழீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்
வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாா்கழி மாத சிறப்பு ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கோயிலில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அனுக்ஞை, உற்சவா் திருமேனி அபிஷேகம், அங்குராா்ப்பணம், அஷ்டபலி, சூலத்தேவா் புறப்பாடு, யாகசாலை பூஜை, ஆலய பிரகாரத்தில் சுவாமி உலா ஆகியவை நடைபெற்றன. ஆருத்ரா தரிசன நிறைவு நாள் வரை தினந்தோறும் கட்டளை பூஜைகள் மற்றும் உற்சவா் தரிசனம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சிவ பக்தா்கள், கோயில் சிவாச்சாரியா்கள் செய்துள்ளனா்.