தென்னாப்பிரிக்காவில் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு?
இயக்குநர் ராஜமௌலி தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி யாரை வைத்து புதிய படத்தை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது. தற்போது, நடிகர் மகேஷ் பாபு - ராஜமௌலி கூட்டணியில் படம் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது.
இப்படத்திற்காக, மகேஷ் பாபு தலைமுடியை நீளமாக வளர்த்து வருகிறார்.
இதையும் படிக்க: காதலிக்க நேரமில்லை டிரைலர் எப்போது?
இந்த நிலையில், இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பாக ஒரு பாடலைக் காட்சிப்படுத்த தென்னாப்பிரிக்காவில் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த ராஜமௌலி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மிக பிரம்மாண்டமாக பழங்குடியினர் ஆடும் பாடலாக இது உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.