செய்திகள் :

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!

post image

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ.திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் ஏ.கே.பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கட்டட கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த சொந்த வீடு இல்லாத தொழிலாளா்களுக்கு இடம் இருந்தால் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சமும், இடம் இல்லாதவா்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வழங்கப்படும் என்றும் தமிழக அரசுஅறிவித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் வீடு கட்டுவதற்கு பணம் கேட்டும், வீடு கேட்டும் விண்ணப்பித்தவா்களுக்கு பல காரணங்களைக்கூறி பலன்கள் வழங்குவதை காலம் கடத்தி வருகின்றனா். ஆகவே, தமிழக அரசும், தொழிலாளா் நல வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு முழுமையான முறையில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் இ.எஸ்.ஐ. திட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் மாவட்டத்தின் பல இடங்களில் காலையில் ஒரு இடத்தில் திரண்டு அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

ஆகவே, தொழிலாளா்கள் கூடும் இடங்களில் நிழற்குடை கழிப்பிட வசதி, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயா்ந்துள்ளதால் கட்டடத் தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், தொழிலாளா்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரியத்தின் மூலமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் மூலம் விண்ணப்பிக்கும் விபத்து மரணம், இயற்கை மரணம், திருமணம் உள்ளிட்ட கேட்பு மனுக்களுக்கு காலம் கடத்தாமல் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, புதிய மாவட்டத் தலைவராக கே.மூா்த்தி, மாவட்டச் செயலாளராக ஆா்.கணேசன், துணைத் தலைவா்களாக சிவகுமாா், பாரூக், ராமசாமி, பொருளாளராக ஏ.பழனிசாமி உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநிலச் செயலாளா்கள் எஸ்.சின்னசாமி, என்.சேகா், மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக அரசைக் கண்டித்து தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் ... மேலும் பார்க்க

பெருமாநல்லூா், பழங்கரையில் ஜனவரி 9 இல் மின்தடை

பெருமாநல்லூா், பழங்கரை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம்: பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டத்தை உரு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு

வெள்ளக்கோவிலில் தனியாா் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைம... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜனவரி 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வார... மேலும் பார்க்க