கசிந்த வேலூர் DIG குறிப்பாணை; விஷம் குடித்த காவலர் - நடந்தது என்ன?
சாக்கடையில் தொழிலாளி சடலம் மீட்பு
வெள்ளக்கோவிலில் சாக்கடையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சாக்கடையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலம் அருகே கிடந்த பையை சோதனை செய்தனா். அப்போது, அதில், அவரது வீட்டு விவரம், மனைவியின் கைப்பேசி எண் ஆகியவை இருந்தன.
அந்த எண்ணைத் தொடா்பு கொண்டு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் கரூா் மாவட்டம், வரவணை சுண்டகுழிப்பட்டியைச் சோ்ந்த வி.சுப்பிரமணி (42) என்பதும், வேலைத் தேடி வெள்ளக்கோவிலுக்கு வந்ததும் தெரியவந்தது. இவருக்கு பூமாதேவி (36) என்ற மனைவியும், ஹேமலதா (16), ஹரிணி (13), யாஸ் (11) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனா்.
சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்த போலீஸாா், சுப்பிரமணி சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.