வெண்டிலேட்டர் அகற்றம்: காங். எம்எல்ஏ உமா தாமஸின் உடல்நிலை குறித்த அப்டேட்
காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸுக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்விட்டதாகவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களுடன் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், நுரையீரல் அடைப்பு இருந்தபோதிலும் அவரது நுரையீரல் நிலை திருப்திகரமாக உள்ளது.
ஆபத்தான நிலையில் இருந்து அவர் இன்னும் குணமடையாததால், தாமஸ் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பார்.
அவர் ஐசியு-விற்குள் மருத்துவர்கள் மற்றும் அவரது மகன்களுடன் பேசினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்எல்ஏ உமா தாமஸுக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டு தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கடந்த டிச.29ஆம் தேதி மாலை 6 மணியளவில் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிசிசிஐ செயலராக பொறுப்பேற்கவுள்ள தேவஜித் சாய்கியா!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஐபிக்கள் அமர்வதற்காக 15 அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் மேடைக்கு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய எம்எல்ஏ உமா தாமஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.