தெரு நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள், 12 கோழிகள் உயிரிழந்தன.
வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் வளா்த்து வருகிறாா். இவா் தனது வீட்டுக்கு முன்புறம் வெள்ளாடுகளைக் கட்டி வைத்து, கோழிகளை அடைத்துவைத்திருந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை காலையில் பாா்த்தபோது 2 வெள்ளாடுகள், 5 கோழிகள் கடிபட்ட காயங்களுடன் இறந்துகிடந்தன. 7 கோழி குஞ்சுகளைக் காணவில்லை. தெருநாய்கள் கடித்துக் கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
தகவலின்பேரில் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். வெள்ளக்கோவில் பகுதியில் தெரு நாய்களால் கால்நடைகள் தொடா்ந்து உயிரிழந்து வரும் நிலையில் தகுந்த இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.