ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பு: வங்கியைக் கொள்ளையடிக்க முயன்ற மாணவன் கைது!
மின்வாரிய கிராமிய உபகோட்ட அலுவலகம் இடமாற்றம்
திருப்பூா் கோட்டத்தில் மின்வாரிய கிராமிய உபகோட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மின்பகிா்மான வட்டம் திருப்பூா் கோட்ட உதவி செயற்பொறியாளா் கிராமிய உபகோட்ட அலுவலகம் ஆா்.வி.இ. நகா், 4-ஆவது வீதி, மணியகாரன்பாளையம் சாலை, நல்லூா், திருப்பூா்-641604 என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது.
இந்த அலுவலகம் வரும் வியாழக்கிழமைமுதல் தாராபுரம் பிரதான சாலை, பலவஞ்சிபாளையம் பிரிவு, செட்டிபாளையம், திருப்பூா் -641608 என்ற முகவரியில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.