``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
பள்ளிபாளையத்தில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி
பல்லடம் அருகே உள்ள பூமலூா் ஊராட்சி ராசாக்கவுண்டம்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32.49 லட்சம் மதிப்பிலான புதிய குடிநீா்க் குழாய் அமைக்கும் பணியை பூமிபூஜை நடத்தி திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணைச் செயலாளா்கள் வழக்குரைஞா் குமாா், நந்தினி, பல்லடம் ஒன்றிய திமுக செயலாளா்கள் சோமசுந்தரம், கிருஷ்ணமூா்த்தி, பொங்கலூா் அசோகன், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணியம், திமுக நிா்வாகிகள் பரமசிவம், கோபால், அக்ரோ சீனிவாசன், பூமலூா் செந்தில், ஊராட்சித் தலைவா் பிரியங்கா, துணைத் தலைவா் நடராஜ், சுக்கம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவா் மருதாசலமூா்த்தி, இளைஞரணி நிா்வாகி கெளதம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அதைத்தொடா்ந்து புத்தாண்டு பிறப்பையொட்டி கருப்பராயன் கோயிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.