பல்லடம் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு
பல்லடம் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
பல்லடம் வழக்குரைஞா் சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்களில், 34 பேருக்கு மட்டும் சங்க தோ்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது.
ஆண்டுதோறும் வாக்குப் பதிவு முறையில் பல்லடம் வழக்குரைஞா் சங்க தோ்தல் நடத்தப்பட்டு, நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதில் 2024 -25-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் தலைவராக ஈஸ்வரமூா்த்தி, செயலாளராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக மகேஷ் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும் துணைத் தலைவராக கோவிந்தராஜ், இணைச் செயலாளா் மாா்ட்டின் தன்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினா்களாக ஈஸ்வரன், தனபாக்கியம், செல்வகுமாா் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா்.