செய்திகள் :

முதல் பந்திலிருந்து ஆஸி.யை திணறடித்த ரிஷப் பந்த்; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!

post image

சிட்னி டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 4 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையும் படிக்க: வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!

4 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 33 பந்துகளில் 61 ரன்கள் (6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்தார்.

சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

சவாலான ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்தினை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டம் பற்றி சச்சின் டெண்டுல்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சவாலான ஆடுகளத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் 50 அல்லது அதற்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய நிலையில், ரிஷப் பந்த் அதிரடியாக 184 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியது உண்மையில் பிரம்மிப்பாக இருக்கிறது. அவர் முதல் பந்திலிருந்தே ஆஸ்திரேலிய அணியை திணறடித்தார். அவர் பேட் செய்வதை பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அதிரடியான ஆட்டம் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தியர்களின் உளவியல் யுக்தி (2 vs 11) பலனளிக்கவில்லை: மிட்செல் ஜான்சன்

புதிதாக அணியில் இணைந்த சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டரை அச்சுறுத்தி வெற்றிபெறலாம் என நினைத்த இந்தியர்களின் உளவியல் யுக்தி பலனளிக்கவில்லை என முன்னாள் ஆஸி. வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். பார்டர் - ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன... மேலும் பார்க்க

ரஷித் கான் அபார பந்துவீச்சு; டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!

ரஷித் கானின் அபார பந்துவீச்சால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆப்கானிஸ்தான் அணி வென்று அசத்தியுள்ளது.ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்... மேலும் பார்க்க

விராட் கோலி சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்: ஏபிடி வில்லியர்ஸ் அறிவுரை!

விராட் கோலியின் நண்பரும் முன்னாள் ஆர்சிபி வீரருமான ஏபிடி வில்லியஸ் சண்டையில் ஈடுபடுவதை குறைக்குமாறு கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்தியா தோல்வியடைந்தது. இதில் 9 இன்... மேலும் பார்க்க

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் நிதானம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்துள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இ... மேலும் பார்க்க

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஸ்மிருதி மந்தனா கேப்டன்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 6) அறிவித்துள்ளது.இந்திய அணி அதன் சொந்த மண்ணில் அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ... மேலும் பார்க்க