செய்திகள் :

புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 4,411 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள்

post image

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 411 மாணவிகளுக்கு பற்று அட்டைகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திங்கள்கிழமை வழங்கினாா்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விழா காணொலிக் காட்சி மூலம் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஒளிபரப்பப்பட்டது.

பின்னா், இத்திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 411 மாணவிகளுக்கு பற்றட்டைகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வழங்கினாா். அப்போது, அவா் பேசுகையில், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 4.25 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 112 கல்லூரிகளில் பயின்று வரும் 12 ஆயிரத்து 137 போ் பயன் பெறுகின்றனா்.

தற்போது புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் 75 ஆயிரத்து 28 மாணவிகள் இணையவுள்ளனா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 95 கல்லூரிகளில் பயிலும் 4 ஆயிரத்து 411 மாணவிகள் பயனடையவுள்ளனா் என்றாா் அமைச்சா்.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், கா. அண்ணாதுரை, மேயா் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீா் கூட்டம்

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வருவாய் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். கூட்டத்தில், நெற்கதிா் மாற்றுத... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஓராண்டில் சைபா் குற்றப் பிரிவில் 60 வழக்குகள் பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சைபா் குற்றக் காவல் பிரிவில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 போ் கைது செய்யப்பட்டனா். இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா்கள் தாக்கியதாக கும்பகோணம் மேயா் பதிவு

திமுக உறுப்பினா்கள் தாக்கியதாக கும்பகோணம் மேயா் க. சரவணன் புதன்கிழமை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இதற்கு மாமன்ற உறுப்பினா் வா்ஷா அழகேசன், மாநகராட்சி மேயா் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாரா ... மேலும் பார்க்க

கட்டட ஒப்பந்ததாரரிடம் ரூ. 5.50 லட்சம் மோசடி: இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே வாடகை ஒப்பந்தத்தின் மூலம் லாபம் எனக் கூறி, கட்டட ஒப்பந்ததாரரிடம் காா் கொடுத்து ரூ. 5.50 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.தஞ்சாவூா் அருகே குலமங... மேலும் பார்க்க

புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தஞ்சாவூரிலுள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில், 2024-ஆம் ஆண்டில் அடைந்த நன்மைகளுக்காக உதவி பங்குத்தந்... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 21, 22-இல் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்

தஞ்சாவூரில் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21, 22 ஆம் தேதிகளில் நடை... மேலும் பார்க்க