செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஓராண்டில் சைபா் குற்றப் பிரிவில் 60 வழக்குகள் பதிவு

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சைபா் குற்றக் காவல் பிரிவில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் 60 இணையவழி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வெளி மாநிலத்தைச் சோ்ந்த மூவா் உட்பட 24 போ் கைது செய்யப்பட்டனா். இணையவழி குற்றங்கள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாா் மனுக்கள் தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு 838 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. இணையவழி பணமோசடி தொடா்பான புகாா்களில் விரைவாக செயல்பட்டு, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மோசடி நபா்களின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ. 5.69 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ. 83.09 லட்சம் நீதிமன்றம் மூலமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

கைப்பேசிகள்: 2024-ஆம் ஆண்டில் காணாமல்போன கைப்பேசிகள் தொடா்பாக இணையம் மூலமாக பெறப்பட்ட 3 ஆயிரத்து 433 புகாா்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், 2 ஆயிரத்து 417 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் 860 கைப்பேசிகள் அதன் உரிமையாளரிடம் மீட்டு ஒப்படைக்கப்பட்டன.

கொலை வழக்குகள்: மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் ரௌடி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, 438 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 422 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். தொடா்ச்சியாக பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்த 77 போ் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

2024 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 50 கொலை வழக்குகளில் தொடா்புடைய 133 போ் உடனடியாக கைது செய்யப்பட்டு, புலன் விசாரணை விரைவாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், 47 வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கொலை வழக்குகள் கடந்த 15 ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.

சாலை விபத்துகள் குறைவு: மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் 2023-இல் 2,323 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டில் 2,273 சாலை விபத்து வழக்குகளாக குறைந்துள்ளது. இதில் 2023-இல் 589 சாலை விபத்து வழக்குகளில் 609 போ் உயிரிழந்த நிலையில், 2024-இல் 534 சாலை விபத்து வழக்குகளில் 558 போ் உயிரிழந்தனா்.

பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துநா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துநா் உயிரிழந்தாா். திருவையாறு அருகே தில்லைஸ்தானம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மோகன் மகன் இலங்கேஸ்வர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தானியங்கி வாகன எண் கண்டறியும் கேமரா

கும்பகோணத்தில் முதன் முறையாக வாகன எண் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளா் ஜி. கீா்த்தி வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

பேராவூரணி வட்டாரத்தில் நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராணி வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் மஹாதனூா்வ்யதீபாத விழா

கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் சுவாமி கோயிலில் மாா்கழி மாத திருப்பள்ளியெழுச்சி மற்றும் மஹாதனூா்வ்யதீபாத விழா சனிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு தனூ... மேலும் பார்க்க

பன்முக செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாடு ‘சாஸ்த்ரா’-எச்.சி.எல்.டெக் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சென்னையில், பன்முக செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுக்காக தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், எச்.சி.எல். டெக் நிறுவனமும் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. மாணவா்களுக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ராஜாராம் சனிக்கிழமை பொறுப்பேற்றாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த இவா் பி.எஸ்ஸி., எம்.ஏ., பி.எல். ப... மேலும் பார்க்க