பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துநா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்திலிருந்து கீழே விழுந்த நடத்துநா் உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே தில்லைஸ்தானம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மோகன் மகன் இலங்கேஸ்வரன் (28). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் சனிக்கிழமை பணியை முடித்துவிட்டு, தஞ்சையிலிருந்து திருவையாறுக்கு சென்ற தனியாா் பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
இந்நிலையில், இப்பேருந்து மணக்கரம்பை அருகே சென்றபோது, நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்தாா். இதனால் பலத்த காயமடைந்த அவா், திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு வழியிலேயே அவா் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நடுக்காவேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.