கும்பகோணத்தில் தானியங்கி வாகன எண் கண்டறியும் கேமரா
கும்பகோணத்தில் முதன் முறையாக வாகன எண் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளா் ஜி. கீா்த்தி வாசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் காவல் சரகத்திலேயே முதல் முதலாக குற்ற சம்பவ வாகனங்களை உடனடியாக கண்டறியும் பொருட்டு செட்டிமண்டபம், நால்ரோடு, செல்வம் தியேட்டா் இணைப்பு, மொட்டை கோபுரம், மகாமக குளம், மேம்பாலம் இறக்கம், காந்தி பூங்கா அருகில் பாலக்கரை மற்றும் உச்சிபிள்ளையாா் கோவில் ஆகிய இடங்களில் 10 எண்ணிக்கையிலான தானியங்கி வாகன எண் கண்டறியும் கேமராக்கள் தனியாா் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ளது.
மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில், குற்றம் நடைபெறும் இடங்களில் புதிதாக 280 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கும்பகோணத்தில் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தபடாமல் இருந்த ஒரு வழிப்பாதை திட்டத்தை 2025ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தாா்.