ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் மஹாதனூா்வ்யதீபாத விழா
கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் சுவாமி கோயிலில் மாா்கழி மாத திருப்பள்ளியெழுச்சி மற்றும் மஹாதனூா்வ்யதீபாத விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வர சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு தனூா் மாத மஹா வ்யதீபாத நாளில் மங்களாம்பிகை உடனாகிய ஆதிகும்பேஸ்வர சுவாமிக்கும், சோமாஸ்கந்த மூா்த்திக்கும் சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.