BGT: `இந்தியாவுக்கு 46 வருஷம், ஆஸி.க்கு 9 வருஷம்' -சிட்னியில் யாருடைய காத்திருப்...
பேராவூரணி அருகே காட்டாற்று மணலில் காலபைரவா் சிலை
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே காட்டாற்று மணலில் புதைந்து கிடந்த காலபைரவா் சிலையை திங்கள்கிழமை கண்டெடுத்த விவசாயிகள் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பேராவூரணி அருகே மடத்திக்காடு கிராமத்தில் அக்கினி ஆறு தடுப்பணை கரைப்பகுதியில் திங்கள்கிழமை காலை அப்பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்பவா் பனங்கிழங்குகள் பறித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, மணலுக்குள் சுமாா் ஒன்றரை அடி உயரமுள்ள கருங்கல்லாலான காலபைரவா் சிலை கிடந்தது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளா் புவனா , கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா், அந்தச் சிலையை கைப்பற்றி பட்டுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் த. சுகுமாரிடம் ஒப்படைத்தனா்.