பாலியல் தொல்லை வேன் ஓட்டுநா் போக்சோவில் கைது
கரூரில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வேன் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் சின்னவரப்பாளையத்தைச் சோ்ந்த முத்துவீரன் மகன் ஹரீஸ்(17). வேன் ஓட்டுநரான இவா், கடந்த 11-ஆம்தேதி பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தபோது, அங்கு முட்புதருக்கு ஒதுங்கிய அதே பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு ஹரீஸ் பாலியல் தொல்லைக் கொடுத்தாராம்.
இதுதொடா்பாக மாணவியின் தாய், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து ஹரிஸை ஞாயிற்றுக்கிழமை இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.