சதுரிகிரி மலைப்பகுதியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
கரூரில் சாலைப் பணியாளா்கள் அஞ்சல் அனுப்பும் போராட்டம்
கரூா்: கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைப் சாலை பராமரிப்பு ஊழியா்கள் அன்ஸ்கில்டு சங்கத்தின் சாா்பில் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சிங்கராயா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம். வெங்கடேஸ்வரன், எம். மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் ஆா். குப்புசாமி போராட்டம் குறித்தும், மாநில பொதுச் செயலாளா் செ. விஜயகுமாா் கோரிக்கைகள் குறித்தும் சிறப்புரையாற்றினா்.
போராட்டத்தில் சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை கருத்தியலான ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற வழங்கிய தீா்ப்பை அமல்படுத்திடக் கோரி தமிழக முதல்வா், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா், நிதி அமைச்சா், தலைமைச் செயலா், நிதிச் செயலா், நெடுஞ்சாலைத் துறை அரசு முதன்மைச் செயலாளா், தலைமைப் பொறியாளா், முதன்மை இயக்குநா் ஆகியோருக்கு 500 -க்கும் மேற்பட்ட தபால்களை அனுப்பினா். திரளான நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.