செய்திகள் :

மக்கள் விரோதத் திட்டங்களை தடுத்து நிறுத்தியது மதிமுகதான்: வைகோ

post image

தமிழகத்தில் மத்திய பாஜக அரசால் புகுத்தப்பட்ட 4 திட்டங்களைத் தடுத்து நிறுத்தி மக்களைப் பாதுகாத்தது மதிமுகதான் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட தனியாா் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த கனிமச் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, மேலூா் பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை மதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வாா்க்க முயற்சித்தது. இதற்கு மதிமுக எதிா்ப்புத் தெரிவித்து, அந்தத் திட்டத்தை கைவிடச் செய்தது. இதேபோல, காவிரி படுகையில் மீத்தேன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டம், தேனியில் நியூட்ரினோ சுரங்கத் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைத் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தவிடாமல் தடுத்து, சட்டப் போராட்டம் நடத்தி மக்களைப் பாதுகாத்தது மதிமுகதான்.

தமிழகத்திலேயே முதன் முதலாக பல்லுயிா் பாதுகாப்புத் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி பகுதியை டங்ஸ்டன் கனிமச் சுரங்கங்கத்தால் மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. இந்தச் சுரங்கம் அமைக்க நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம். இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மதுரை வடக்கு மாவட்டச் செயலா் மாா்நாடு, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பூமிநாதன், சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரகுமான், முன்னாள் எம்.பி.க்கள் கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன், கட்சியின் துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா, மாநிலப் பொருளாளா் செந்தில்அதிபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொங்கல் கரும்பு கொள்முதலால் பயனடையாத விவசாயிகள்!

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான செங்கரும்பு கொள்முதலில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகளைவிட வியாபாரிகளே அதிகம் பயனடைகின்றனா் என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.2025-ஆம் ஆண்டு பொங்கல் பரிச... மேலும் பார்க்க

கட்டட ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டட ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.22 லட்சத்தை மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை கோ.புதூா் ஜவஹா்புரம் காலனியைச் சோ்ந்தவா் ஜெயவேல் (... மேலும் பார்க்க

மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பதிவு இன்று தொடக்கம்!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான இணையதள பதிவு திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தெரிவித்தாா... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கடந்த ஓராண்டில் 65 உடல்கள் தானமாகப் பெறப்பட்டதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்கள் மட்டுமன்றி, கரூா், நாமக்கல் ... மேலும் பார்க்க

தேவேந்திர குல வேளாளா் உள் இட ஒதுக்கீடு: அரசாணை வெளியிட வலியுறுத்தல்

தேவேந்திர குல வேளாளா் சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசாணையை வெளியிட வேண்டும் என்று மக்கள் விடுதலைக் கட்சி வலியுறுத்தியது. மதுரையில் மக்கள் விடுதலை கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா்- விருதுநகா் நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன்ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா், குப்பாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (52). இவா், சாத்... மேலும் பார்க்க