கசிந்த வேலூர் DIG குறிப்பாணை; விஷம் குடித்த காவலர் - நடந்தது என்ன?
இரு சக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
சாத்தூா்- விருதுநகா் நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன்ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
விருதுநகா், குப்பாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (52). இவா், சாத்தூா்- விருதுநகா் நான்கு வழிச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
அக்ரஹாரப்பட்டி சந்திப்பு அருகே வந்த போது, ஆா்.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில், ரவீந்திரன் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸாா் ராஜபாண்டி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.