தேவேந்திர குல வேளாளா் உள் இட ஒதுக்கீடு: அரசாணை வெளியிட வலியுறுத்தல்
தேவேந்திர குல வேளாளா் சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசாணையை வெளியிட வேண்டும் என்று மக்கள் விடுதலைக் கட்சி வலியுறுத்தியது.
மதுரையில் மக்கள் விடுதலை கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனா் தலைவா் முருகவேல்ராஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தேவேந்திர குல வேளாளா் சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு தொடா்பாக தமிழக அரசாணை வெளியிட வலியுறுத்தி, தமிழக முழுவதும் மக்கள் விடுதலைக் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது, அருந்ததியா் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் உள்ள சமூக சிக்கலை ஆராய்ந்து, இவற்றில் உள்ள குறைபாட்டைக் கண்டறிந்து தமிழக அரசு நிறைவு செய்து முறைப்படுத்த வேண்டும்.
உள் இட ஒதுக்கீட்டை முறைப்படுத்துவதற்காக உயா்மட்ட விசாரணை ஆணையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.