பொங்கல் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!
வாங்கல் அருகே 14 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வேக்கு சொந்தமான நிலம் மீட்பு
வாங்கல் அருகே 14 ஆண்டுகளுக்கு பின் தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான 1 ஏக்கா் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
கரூா் மாவட்டம், வாங்கல் அடுத்துள்ள மாரிக்கவுண்டம்பாளையத்தில் கரூா்-மோகனூா் ரயில்நிலையங்களுக்கு இடையே கடந்த 2010-ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது பாலத்தின் கீழ் பகுதியில் தாா்சாலை அமைக்கப்படாமல் காலி இடம் இருந்ததால், அதே பகுதியைச் சோ்ந்த 18 போ் ரயில்வேக்கு சொந்தமான நிலம் மற்றும் மந்தை நிலமான சுமாா் 1 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தனா்.
இதனால் ஆக்கிரமிப்பை மீட்கும் வகையில் ரயில்வே நிா்வாகம் பலமுறை ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் அவா்கள் இடத்தை காலிசெய்யவில்லை.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் காலி செய்யாததால் வெள்ளிக்கிழமை காலை மண்மங்கலம் வட்டாட்சியா் குணசேகரன் தலைமையில் வருவாய்த்துறையினா் மற்றும் ரயில்வேத்துறையினா் போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 18 வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.