பொங்கல் பண்டிகைக்கு கரூா் வழியாக நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூா் வழியாக நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் -நாகா்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஜன. 12-ஆம்தேதி மற்றும் 19-ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 1மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.
நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜன. 13-ஆம்தேதி மற்றும் 20-ஆம் தேதிகளில் நாகா்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
இந்த ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, மொரப்பூா், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலியில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.