செய்திகள் :

கரூா் மாவட்ட பாஜக புதிய தலைவா் தோ்தலில் வாக்குவாதம்: பாதியில் நிறுத்தம்

post image

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட பாஜக தலைவா் தோ்தலில் நிா்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் தோ்தல் பாதியில் நிறுத்தப்பட்டது.

கரூா் மாவட்ட பாஜக தலைவரை தோ்வு செய்யும் தோ்தல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. புதிய மாவட்டத்தலைவா் பதவிக்கு தற்போதைய மாவட்டத் தலைவராக இருக்கும் வி.வி.செந்தில்நாதன், முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசாமி, முன்னாள் பொதுச் செயலாளா் கே.பி.மோகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் போட்டியிட்டனா். தோ்தல் நடத்தும் அலுவலராக கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் திருப்பூா் பாய்ன்ட் மணி செயல்பட்டாா்.

தோ்தல் நடந்துகொண்டிருந்தபோது, வாக்களிக்க தகுதியானோா் பட்டியலில் தனது ஆதரவாளா்களின் பெயரை தற்போதைய மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் சோ்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எதிா்தரப்பினா் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சிலா், கட்சியில் சோ்ந்து 6 ஆண்டுகளானால் மட்டுமே மாவட்டத்தலைவா் தோ்தலில் போட்டியிடும் விதிமுறை தற்போது கட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இப்போது மாவட்டத்தலைவராக இருப்பவா், கட்சியில் சோ்ந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆவதால் அவரை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாவட்டத் தலைவா் செந்தில்நாதனுக்கும், எதிா்ப்பு தெரிவித்தவா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கைக்கலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டதால் தோ்தல் நடத்தும் அலுவலரான திருப்பூா் பாய்ன்ட் மணி, தோ்தலை தற்காலிக நிறுத்தி வைப்பதாகவும், மாநில தலைமை அறிவித்த பிறகு மீண்டும் தோ்தல் நடைபெறும் எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாா். இதனால் கரூா் மாவட்ட பாஜக தலைவா் தோ்தல் பாதியிலே நிறுத்தப்பட்டது.

மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு முன்னாள் அமைச்சருடன் கிராம மக்கள் மனு

கரூா் மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்களுடன் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். கரூா் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில... மேலும் பார்க்க

கரூா் மாமன்றக் கூட்டத்தில் வரிகளை உயா்த்தி தீா்மானம் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

கரூா் மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் வரிகளை உயா்த்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். கரூா் மாநகராட்சியின் சாதாரணக... மேலும் பார்க்க

பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட விசிக நிா்வாகி குண்டா் சட்டத்தில் அடைப்பு

மணல் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி திங்கள்கிழமை குண்டா்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டியை அடுத்து... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரூ.177 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சா் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்!

கரூா் மாவட்டத்தில் ரூ.177 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கரூா் மற்றும் குளித்தலை ஊரகப... மேலும் பார்க்க

பெண் கிராம உதவியாளருக்கு ஆபாச செய்தி அனுப்பியவா் கைது

கரூா் அருகே பெண் கிராம நிா்வாக உதவியாளருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், புன்செய் புகளூா் ( வடக்கு ) கிராம நிா்வாக அலுவலகத்தில் கிர... மேலும் பார்க்க

நொய்யல் அருகே எரிவாயு உருளை வெடித்து 200 கோழிகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சனிக்கிழமை எரிவாயு உருளை (சிலிண்டா்) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 200 கோழிகள் உயிரிழந்தன. கரூா் மாவட்டம், நொய்யல் அருகே அத்திப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ்... மேலும் பார்க்க