KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி
பெண் கிராம உதவியாளருக்கு ஆபாச செய்தி அனுப்பியவா் கைது
கரூா் அருகே பெண் கிராம நிா்வாக உதவியாளருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், புன்செய் புகளூா் ( வடக்கு ) கிராம நிா்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவா் தனலட்சுமி (42) . இவருக்கு புன்செய் புகளூா் கட்சியப்பன் நகரைச் சோ்ந்த சேகா் (47) என்பவா், வாட்ஸ் அப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை தொடா்ந்து அனுப்பி வந்தாராம்.
இந்நிலையில், இதுகுறித்து தனலட்சுமி, சேகரிடம் சனிக்கிழமை கேட்டபோது, இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சேகா் தனலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து தனலட்சுமி வேலாயுதம்பாளையம் போலீஸில் புகாா் செய்தாா். இதன்பேரில், போலீஸாா் சேகரை கைது செய்து விசாரிக்கின்றனா்.