ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
பொறியியல் கல்லூரி மாணவரை தாக்கிய 3 போ் கைது
கரூா் அருகே பொறியியல் கல்லூரி மாணவரை தாக்கிய பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் கிழக்குத் தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த வீரன் மகன் கவின் (20). இவா் தளவாபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். மேலும், தனியாா் ஹோட்டலில் பகுதி நேர ஊழியராக வேலைபாா்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஹோட்டலில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது கவினின் கல்லூரியில் படிக்கும் நண்பா்கள் ராஜவேலு, சஞ்சய் இருவரும் கவினுக்கு போன் செய்து தவிட்டுப்பாளையத்தில் உன்னை பாா்க்க நாங்கள் வந்தபோது, உங்கள் ஊரைச் சோ்ந்த சிறுவா்கள் மோகன்ராஜ், ஜஸ்வந்த், வசந்த் ஆகிய மூன்று பேரும் தகராறு செய்வதாக கூறியுள்ளனா்.
இதையடுத்து கவின் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று மூவரிடமும் தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது அவா்கள் மூன்று பேரும் சோ்ந்து கவினை தகாத வாா்த்தைகளால் திட்டி அங்கு கிடந்த கட்டையால் தாக்கிவிட்டு தப்பிஓடி விட்டனா்.
இதையடுத்து அருகில் இருந்தவா்கள் கவினை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து சிறுவா்கள் 3 பேரையும் கைது செய்தனா். இதில் மோகன்ராஜ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பும், ஜஸ்வந்த் 9-ஆம் வகுப்பும், வசந்த் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பும் படித்துவருவது குறிப்பிடத்தக்கது.