செய்திகள் :

புகழூா் கோயில் திருவிழாவில் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி

post image

கரூா்: கரூா் மாவட்டம், புகழூா் பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பக்தா்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். இதையடுத்து பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி ஊா்வலமாக வந்து, கோயில் வளாகத்தில் தயாராக இருந்த தீக் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். பின்னா் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சிறுவன் உள்பட இருவா் கைது

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த மணி மகன் லிங்கேஸ்வர... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியுடன் ஏமூா், ஆண்டாங்கோயில் கிழக்கு இணைப்பு

கரூா் மாநகராட்சியுடன் ஏமூா், ஆண்டாங்கோயில் கிழக்கு ஆகிய இரு ஊராட்சிகளும் இணைக்கப்படுவதாக புதன்கிழமை உத்தேச அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 1988-இல் கரூா் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. ப... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பேரூராட்சியில் வேலம்பாடி ஊராட்சி இணைப்பு: பொதுமக்கள் அதிா்ச்சி

கிராமமக்களின் எதிா்ப்பையும் மீறி வேலம்பாடி ஊராட்சி அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து 8 கி.மீ. தொல... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலுக்கு முன் குளித்தலை நகராட்சியை தரம் உயா்த்த வேண்டும்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

உள்ளாட்சித் தோ்தலுக்கு முன் குளித்தலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனா். தமிழகத்தில் குளித்தலை நகராட்சிக்கு என தனி பெருமை உண்டு. இத் தொகுதியி... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத் தொகை

கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. கரூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், (ஆவின்), பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பால் வற்றும் காலங்கள... மேலும் பார்க்க

ஒரத்தை நீரேற்று நிலைய மராமத்து பணிக்கு டிஎன்பிஎல் ரூ. 3.75 லட்சம் நிதி

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ஒரத்தை நீரேற்று நிலைய மராமத்துப் பணிக்கு ரூ.3.75 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. கரூா் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரத்தை நீரேற்று ப... மேலும் பார்க்க