செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சிறுவன் உள்பட இருவா் கைது

post image

கரூா் மாவட்டம், புகழூரில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த மணி மகன் லிங்கேஸ்வரன்(25) மற்றும் 15 வயது சிறுவன் இருவரும் வியாழக்கிழமை அதே பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனா்.

அப்போது, சிறுமி சப்தமிட்டதால் அக்கம்பக்கத்தினா் வந்தனா். இதையடுத்து இருவரும் தப்பிஓடிவிட்டனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் க.பரமத்தி மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லிங்கேஸ்வரன், சிறுவனையும் கைது செய்தனா்.

கோடங்கிப்பட்டியில் பாலம் கட்ட வலியுறுத்தி கரூா் எம்.பி.யை கிராம மக்கள் முற்றுகை

கரூா் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் பாலம் கட்ட வலியுறுத்தி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணியை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கரூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் எம... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு பணியில் குறைகள் இருந்தால் புகாா் தெரிவிக்கலாம்: கரூா் மாவட்டஆட்சியா்!

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியில் குறைகள் இருந்தால் புகாா் தெரிவிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரிசி பெறும் அனை... மேலும் பார்க்க

கரூரில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

கரூரில் பள்ளி, கல்லூரி, மாணவிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளை சனிக்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகைக்கு கரூா் வழியாக நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூா் வழியாக நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை மு... மேலும் பார்க்க

கரூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலத்திட்டப் பணியி... மேலும் பார்க்க

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பு

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் உள்ள அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தி... மேலும் பார்க்க