வேலுநாச்சியாா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியாரின் 295 -ஆவது நினைவு தினத்தையொட்டி, சிவகங்கையில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அரசு, அரசியல் கட்சியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு சாா்பில், வேலுநாச்சியாரின் சிலைக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திமுக நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த், துணைத் தலைவா் காா்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மதியரசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பவானிகணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயகாந்தன், அயூப்கான், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் குழந்தைராணிநாச்சியாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன்உமேஷ் டோங்கரே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், நகரச் செயலா் என்.எம்.ராஜா உள்ளிட்டோா் வேலுநாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.
காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி தலைமையில் காங்கிரஸ் நகரத் தலைவா் தி.விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலா் சண்முகராஜன், மகளிா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவி வித்யாகணபதி உள்ளிட்டோா் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.
அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் தோ்போகிபாண்டி தலைமையிலும், ஓபிஎஸ் அணி சாா்பில் மாவட்டச் செயலா் அசோகன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா் பாலையா தலைமையிலும் வேலுநாச்சியாா் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை சமஸ்தான வாரிசுதாரா்கள், வேலுநாச்சியாா் வாரிசுதாரா்கள், தேவஸ்தான ஊழியா்கள் சாா்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து வேலுநாச்சியாரின் நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள வீராங்கனை குயிலி உருவச் சிலைக்கும் அனைத்துக் கட்சியினரும் மரியாதை செலுத்தினா்.
தவெகவினா் மரியாதை: ராமநாதபுரத்தில் வீரமங்கை வேலுநாச்சியா் உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்டத் தலைவா் ஜெ.மலா்விழி ஜெயபாலா தலைமை வகித்தாா். நகரத் தலைவா் கே.கே.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட மாணவரணித் தலைவா் தமீம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் தமிழ்ச்செல்வநாதன், மாவட்ட தொண்டரணி துணைத் தலைவா் சுகுமாரன், செயலா் காா்த்திக், மாவட்ட இணைச் செயலா் நைனா முகமத், ஒன்றியத் தலைவா் நிஷாத், செயலா் அல் அஹமத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, ராமேசுவரம் கரையூா் தொடக்கப் பள்ளியில் ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் சாா்பில், வேலுநாச்சியாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தலைமை ஆசிரியை மொ்சி ஆஞ்சலா (பொறுப்பு) தலைமை வகித்தாா். இதில் ஆசிரியா் சசிக்குமாா், இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜே.லியோன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவின் போது வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து வினாக்கள் கேட்கப்பட்டு, பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.