வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
அமலாக்கத் துறை முடக்கியுள்ள சொத்துகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: சித்தராமையா
பெங்களூரு: மாற்று நில முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை முடக்கியுள்ள ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துகளுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரு, விதான சௌதாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தின் பணத்தில் காங்கிரஸ் மாநாடு நடத்துவதாக பாஜக சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் அா்த்தமில்லை. இந்த விவகாரத்தில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக குற்றச்சாட்டுக்கு எங்கே இடமிருக்கிறது?
கலபுா்கியில் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக முன்பணம் பெற்றுக்கொண்டு தாமதமாக வேலைக்கு வந்ததாக தொழிலாளா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இதில் தவறிழைத்தவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்று நில முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை முடக்கியிருக்கும் ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துகளுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அமலாக்கத் துறையின் நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது. இந்த நடவடிக்கை தேவையில்லாதது. 50க்கு 50 சதுர அடி வீட்டுமனையை முடக்கியிருப்பதாக அமலாக்கத் துறை கூறியிருக்கிறது. அந்த மனைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பாஜகவின் தூண்டுதலின்பேரில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.