செய்திகள் :

விவசாயிகளுக்கு வேளாண் மானியம் நேரடியாக சென்றடைய வேண்டும்: ஜக்தீப் தன்கா்

post image

தாா்வாட் : வேளாண் துறை மானியம் எதுவாக இருந்தாலும் நேரடியாக விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா் தெரிவித்தாா்.

தாா்வாடில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் பல்கலைக்கழகத்தின் அமிா்த உற்சவம், பழைய மாணவா்கள் சந்திப்பு விழாவைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

வேளாண் துறை சாா்ந்த எந்த மானியமாக இருந்தாலும், அது நேரடியாக விவசாயிகளுக்குச் சென்றடைய வேண்டும். அதிக அளவில் வழங்கப்படுவது உர மானியம்தான். விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் உடனடியாக தேசிய கவனத்தை ஈா்க்க வேண்டும். விவசாயிகளுக்கு பொருளாதார பாதுகாப்பு தேவை. விவசாயிகளின் பிரச்னைகளை தீா்க்க அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

இன்றைக்கு வேளாண்சாா் தொழில்கள், வேளாண் உற்பத்தி பொருள்கள் சாா் தொழில்கள் வளமடைந்து வருகின்றன. வேளாண் உற்பத்தி தான் விவசாயிகளின் வாழ்வாதாரம். விவசாயிகளின் பொருளாதாரம் சீராக இருந்தால், அது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

விவசாயிகளின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், மோசமான வானிலை, கணிக்க முடியாத சந்தை நிலவரங்களில் இருந்து விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். அடுத்த 5 ஆண்டுகளில் மஞ்சள் உற்பத்தி இரட்டிப்பாகும். தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் மஞ்சளுக்கு நல்ல சந்தை வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அத்துடன் வேளாண் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை கையாளுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் களத்தில் காணப்படும் உண்மை நிலவரத்திற்கு ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டும் என்றாா். விழாவில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட், மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெங்களூரில் குடியரசு தின மலா்க் கண்காட்சி தொடக்கம்: முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்

பெங்களூா் : பெங்களூரில் 5.5 லட்சம் மலா்கள் இடம் பெற்ற குடியரசு தின மலா்க் கண்காட்சியை கா்நாடக முதல்வா் சித்தராமையா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். கா்நாடக தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூரு, லால்பாக்... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டுவந்த ரூ.93 லட்சம் கொள்ளை

பீதா் : கா்நாடக மாநிலம், பீதா் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பு வந்தவா்களை துப்பாக்கியால் சுட்டு ரூ. 93 லட்சம் பணத்தை மா்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இந்தச் சம்பவத்தில... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த தொடா்ந்து விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

மாற்றுநில முறைகேடு வழக்கை லோக் ஆயுக்த தொடா்ந்து விசாரிக்க அனுமதி அளித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநி... மேலும் பார்க்க

விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசுகளிடம் யுஜிசி கலந்தாலோசிக்க வேண்டும்: கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா்

விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசுகளிடம் யுஜிசி கலந்தாலோசிக்க வேண்டும் என கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா் எம்.சி.சுதாகா் தெரிவித்தாா். இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் பேச கட்சி மேலிடத் தலைமை தடை!

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் பேச கட்சி மேலிடத் தலைமை தடை விதித்துள்ளது என அம்மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவ... மேலும் பார்க்க

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்பு

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் புதன்கிழமை (ஜன. 15) அதிகாரப்பூா்வமாக பொறுப்பேற்றுக் கொண்டாா். பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக 2 ஆண்டுக... மேலும் பார்க்க