Vanitha Vijayakumar: `40 வயதில் குழந்தை...' காதல், காமெடி காட்சிகளுடன் வெளியானது MRS & MR Teaser!
நடிகை வனிதா விஜயகுமார் நடித்து - தயாரித்துள்ள திரைப்படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் நடன இயக்குனர் ராபர்ட் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாத்திமா பாபு, செஃப் தாமு, ஷகீலா, உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதில், 40 வயதைக் கடந்த வனிதா விஜயகுமார், வயது மூப்பை ஏற்றுக்கொள்ளாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், 40 வயதில் குழந்தை வேண்டும் என விரும்புவதும், அவரின் கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என மறுப்பதுமாக டீசர் தொடங்குகிறது. இவர்களுக்கு மத்தியில் நடக்கும் ஊடல், கூடல், காமெடி எனக் கதை செல்லும் எனத் தெரிகிறது. இந்தப் படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.