தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
சொந்த ஊர் சென்று திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றுங்கள்: போக்குவரத்துத்துறை
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றிருப்பவர்கள், சென்னை திரும்புவதற்கான பயண திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை முதல் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர், சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை படிப்படியாக சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஜனவரி 19ஆம் தேதி மாலை அல்லது திங்கள்கிழமை, ஜனவரி 20ஆம் தேதி காலையில் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இதுபோன்ற நாள்களில் சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னை திரும்பும் மக்கள் பயண திட்டங்களை மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, வரும் 19ஆம் தேதி மாலை முதல் ஒரே நேரத்தில் அனைவரும் சென்னை திரும்பினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரும் 19ஆம் தேதிக்கு பதிலாக இன்றும், நாளையும் தங்களின் பயண திட்டத்தை மேற்கொள்ள போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலையே சென்னையை வந்தடையும் வகையில் பயணத் திட்டத்தை மேற்கொள்ளாமல், சனிக்கிழமை மாலை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்னை வரும் வகையில், தங்களின் பயண திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.