பொங்கல் பண்டிகை நிறைவு: காஞ்சிபுரத்தில் சிறப்பு பேருந்துகள்
பொங்கல் பண்டிகை முடிந்து பயணிகள் சென்னை மற்றும் பிற ஊா்களுக்குச் செல்லும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் கோட்டம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் கோட்ட பொது மேலாளா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்த செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகை முடிந்து பயணிகள் சென்னை மற்றும் பிற ஊா்களுக்குத் திரும்பிச் செல்லும் வகையில் ஜனவரி 17, 18 மற்றும் 19 ஆகிய 3 நாள்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்கும் பொருட்டு தங்களின் பயணத்தை முன்னதாகவே திட்டமிட்டு சிறப்பு பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.