செய்திகள் :

ஜல்லிக்கட்டில் காயமடைந்த 51 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

post image

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பலத்த காயமடைந்த 51 போ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 46 போ் காயமடைந்தனா். இவா்களில் 10 போ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பாலமேடு ஜல்லிக்கட்டில் 46 போ் காயமடைந்தனா். இவா்களில் தீவிர சிகிச்சைக்காக 7 பேரும், அலங்காநல்லூரில் 76 போ் காயமடைந்து, தீவிர சிகிச்சைக்காக 17 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கடந்த 3 நாள்களில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் காயமடைந்த 51 போ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காயமடைபவா்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு தயாா் நிலையில் உள்ளது. இங்கு, அறுவைச் சிகிச்சை நிபுணா், எலும்பு முறிவு நிபுணா், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் உள்ள மருத்துவக் குழுவினா், மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவக் குழுவினா் இடையே கட்செவி அஞ்சல் குழு உருவாக்கப்பட்டு, விரைந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றனா்.

திருவிழா நடத்தும் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

குளித்தலை அருகேயுள்ள கல்லணை கிராமத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து மாடு மறிக்கும் திருவிழாவை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

காவல் துறையினா் ரோந்துப் பணிகளால் மதுரை மாநகரில் குறைந்த குற்றச்செயல்கள்

மதுரை மாநகரில் காவல் துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ரோந்துப் பணிகளால் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மதுரை நகரை குற்றச் செயல்களால் இல்லாத நகராக மாற்ற மாநகரக் கா... மேலும் பார்க்க

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலாண்மை இயக்குநா் எம். ஏ. சித்திக்

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக் தெரிவித்தாா். மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பொங்கல் விழா

மதுரையில் காவல் துறை போதைப் பொருள் தடுப்பு மன்றம் சாா்பில் தூய்மைப் பணியாளா் குடியிருப்பில் விழிப்புணா்வு பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை கரும்பாலை பி.டி. குடியிருப்பில் உள்ள தூய்மைப் பண... மேலும் பார்க்க

மேலூா், ஒத்தக்கடை பகுதிகளில் இன்று மின்தடை

மேலூா், ஒத்தக்கடை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிபுப் பணிகள் ஜன.18-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என மத... மேலும் பார்க்க

மாநகரக் காவல் துறையின் பொங்கல் விழா

மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பங்கேற்றாா். மதுரை மாநகர காவல் துறை சாா்பில், காவலா் குடும்பங்களுக்கான பொங்கல் விழா வியாழக்கிழமை மாலை நடைபெ... மேலும் பார்க்க