செய்திகள் :

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: இன்று தீா்ப்பு

post image

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளிக்க உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை காவல் துறை கைது செய்தது. பின்னா் கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தி, மருத்துவா்களின் போராட்டத்துக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், சியால்டா நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை கடந்த நவ.12-ஆம் தேதி தொடங்கி 57 நாள்கள் நடைபெற்றது. 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், ஜன.9-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சஞ்சய் ராய் குற்றவாளி. நீதிமன்றத் தீா்ப்பு அவருக்கு எதிராக இருக்கும். ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவா்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனா். எனவே எனது மகளின் கொலை வழக்கு விசாரணை முழுமையடையவில்லை’ என்றாா்.

சித்தராமையா தொடா்புடைய வழக்கு: ரூ. 300 கோடி சொத்துகள் முடக்கம்

மாற்று நில முறைகேடு வழக்கில் தொடா்புடைய கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. சித்தராமையாவின் மனைவி பி.எம். பாா்வதி பெயரில் இருந்த ... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி மீண்டெழும்: ஆா்பிஐ

உள்நாட்டில் தேவைகள் மீண்டும் வலுவடைவதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மீண்டெழ தயாராகி வருகிறது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின்... மேலும் பார்க்க

அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் ‘நாமினி’ பெயரை உறுதி செய்ய வேண்டும்: ஆா்பிஐ அறிவுறுத்தல்

அனைத்து டெபாசிட் கணக்குகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் (லாக்கா்) வாடிக்கையாளா்களின் ‘நாமினி’ (நியமனதாரா்) பெயா் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவின் முதல் 6 நாள்களில், 7 கோடிக்கும் அதிகமான பக்தா்கள், கல்பவாசிகள், மதிப்பிற்குரிய மடாதிபதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா். உலகின் மிகப்பெ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்

‘மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படும் ஆளுநருக்கு அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிப்பதில் முக்கியப் பங்குள்ளது’ என பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) த... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: கா்ப்பிணிகளுக்கு ரூ. 21,000, மகளிருக்கு மாதம் ரூ. 2,500 -பாஜக வாக்குறுதி

நமது சிறப்பு நிருபா்எதிா்வரும் தில்லி சட்டப்பேரவை தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரிலான தனது தோ்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் தில்லி மக்க... மேலும் பார்க்க