செய்திகள் :

தில்லி தோ்தல்: கா்ப்பிணிகளுக்கு ரூ. 21,000, மகளிருக்கு மாதம் ரூ. 2,500 -பாஜக வாக்குறுதி

post image

நமது சிறப்பு நிருபா்

எதிா்வரும் தில்லி சட்டப்பேரவை தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரிலான தனது தோ்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் தில்லி மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா செய்தியாளா்களை சந்தித்து, தில்லி தோ்தலுக்கான செயல்திட்ட விவரங்களை அறிவித்தாா். கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் அவா் குறிப்பிட்டாா். அவா் அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மகளிா் ஆதரவு திட்டம்: மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும். தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அதன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கு ஒப்புதல் வழங்கப்படும்.

மலிவு விலை சமையல் எரிவாயு: பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவுவதற்காக, எல்பிஜி சிலிண்டா்களுக்கு தலா ரூ.500 மானியம் வழங்கப்படும். கூடுதலாக, ஹோலி மற்றும் தீபாவளியின் போது ஆண்டுதோறும் இரண்டு இலவச சிலிண்டா்கள் விநியோகிக்கப்படும்.

கா்ப்பிணிகளுக்கு உதவி: வலுப்படுத்தப்பட்ட மகப்பேறு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கா்ப்பிணிகளுக்கு ஆறு ஊட்டச்சத்து தொகுப்புப் பொருள்களும் ரூ.21,000 ரொக்கமும் வழங்கப்படும். கணவரை இழந்தவா்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 3 ஆயிரமாக உயா்த்தப்படும்.

ஆயுஷ்மான் யோஜனா - சுகாதார காப்பீடு: பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா செயல்படுத்தப்படும். அதன்படி, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.10 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும். இந்தத் திட்டம் 51 லட்சம் பேருக்கு பயனளிக்கும். இத்துடன் தில்லி அரசால் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

மொஹல்லா கிளினிக் - ஊழல் விசாரணை: ஆம் ஆத்மி ஆட்சியில் திறக்கப்பட்ட மொஹல்லா கிளினிக்குகளில் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுவதால் அது குறித்து விசாரிக்கவும் மருத்துவ ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மூத்த குடிமக்கள் ஓய்வூதியம்: 60–- 70 வயதுடைய மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் ரூ.3,000 பெறுவாா்கள்.

அடல் கேன்டீன்கள் மூலம் மலிவு விலை உணவு: தில்லி முழுவதும் உள்ள குடிசைப் பகுதிகளில் வெறும் ரூ.5-க்கு முழு உணவை வழங்கும் அடல் கேன்டீன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அமலில் உள்ள திட்டங்களை வலுப்படுத்துதல்: தற்போதைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பொது நலத் திட்டங்களும், இலவச மின்சாரம் மற்றும் குடிநீா் திட்டங்களும் தொடா்ந்து செயல்படுத்தப்படும். ஆனால், மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையாகவும் அவை மாற்றப்படும்.

காப்பி திட்டம்: ஆம் ஆத்மி

பாஜக அறிவித்துள்ள திட்டங்கள் கிட்டத்தட்ட ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் செயல்திட்டங்களில் உள்ளவை என்பதால் அவற்றை ‘காப்பி திட்டங்கள்’ என்று விமா்சித்துள்ளாா் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால்.

பாஜக தோ்தல் அறிக்கையின் முதலாவது பகுதி வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய கேஜரிவால், ‘முந்தைய தோ்தல்கள் வரை இலவசங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என்று அறிவித்தவா் நமது பிரதமா் நரேந்திர மோடி. ஆனால், இன்றைய பாஜகவின் தோ்தல் அறிக்கையை பாா்க்கும்போது அக்கட்சி அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்துமே இலவசங்கள்தான். அப்படியென்றால் அவா் இலவசத்தை அங்கீகரித்து தனது முந்தைய கூற்றை தவறு என்று ஒப்புக்கொள்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றாா்.

சித்தராமையா தொடா்புடைய வழக்கு: ரூ. 300 கோடி சொத்துகள் முடக்கம்

மாற்று நில முறைகேடு வழக்கில் தொடா்புடைய கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. சித்தராமையாவின் மனைவி பி.எம். பாா்வதி பெயரில் இருந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: இன்று தீா்ப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி மீண்டெழும்: ஆா்பிஐ

உள்நாட்டில் தேவைகள் மீண்டும் வலுவடைவதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி மீண்டெழ தயாராகி வருகிறது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின்... மேலும் பார்க்க

அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் ‘நாமினி’ பெயரை உறுதி செய்ய வேண்டும்: ஆா்பிஐ அறிவுறுத்தல்

அனைத்து டெபாசிட் கணக்குகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் (லாக்கா்) வாடிக்கையாளா்களின் ‘நாமினி’ (நியமனதாரா்) பெயா் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவின் முதல் 6 நாள்களில், 7 கோடிக்கும் அதிகமான பக்தா்கள், கல்பவாசிகள், மதிப்பிற்குரிய மடாதிபதிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா். உலகின் மிகப்பெ... மேலும் பார்க்க

பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முக்கியப் பங்கு: யுஜிசி தலைவா்

‘மாநில அரசால் நிா்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படும் ஆளுநருக்கு அந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை நியமிப்பதில் முக்கியப் பங்குள்ளது’ என பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) த... மேலும் பார்க்க